தமிழ்நாடு

tamil nadu

அத்திவரதர் தரிசனத்தில் காவல் புரிந்த காவல் துறையினருக்கு  ஊதியத்துன் விடுமுறை.

அத்திவரதர் தரிசனத்தில் இரவு பகல் பாராது காவல் புரிந்த காவல் துறையினருக்கு ஊதியத்துடன் கூடிய  இரண்டுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

By

Published : Aug 18, 2019, 8:45 PM IST

Published : Aug 18, 2019, 8:45 PM IST

அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலிலுள்ள குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த வைபவத்தை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசித்தனர்.

அத்திவரதர் தரிசனத்தில் காவல் புரிந்த காவல் துறையினருக்கு ஊதியத்துன் விடுமுறை.

ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் ஆகஸ்டு 17 அன்று முடிவடைந்தது. இந்த 48 நாட்களாக பல்வேறு இன்னல்களுக்கிடையே இரவு பகல் பாராமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .நேற்றோடு அத்திவரதர் தரிசனம் முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனையடுத்து இரவு பகம் பாராமல் அயராது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் விடுமுறையை திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details