தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழையால் நிரம்பிய அத்திவரதர் குளம்!

காஞ்சிபுரம்: தொடர் கனமழை காரணமாக உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் குளம் நிரம்பியுள்ளது.

By

Published : Dec 9, 2020, 1:54 PM IST

Published : Dec 9, 2020, 1:54 PM IST

athi varadar
athi varadar

உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் திருவிழா 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அப்போது கோடிக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தற்போது அத்திவரதர் இருக்கக்கூடிய அனந்தசரர் குளத்தில் நீராவி மண்டபம் முழுமையாக நிரம்பியுள்ளது. நீராவி மண்டபத்தில் உள்ள 14 படிக்கட்டுகளும் முழுமையாக தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது.

14 மாதங்களுக்குப் பிறகு அத்திவரதர் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தற்போது இருக்கும் தண்ணீர்போல் இதுவரை பார்த்ததில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் பாதுகாப்புக்காகவும் தண்ணீர் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தற்போதுவரை குளத்தில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details