தமிழ்நாடு

tamil nadu

43ஆம் நாள் வைபவம்...! மஞ்சள், பச்சை நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபத்தின் 43ஆவது நாளான இன்று மஞ்சள், பச்சை வண்ண பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்தவாறு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

By

Published : Aug 12, 2019, 12:49 PM IST

Published : Aug 12, 2019, 12:49 PM IST

athi varadar

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 43ஆம் நாளான இன்று மஞ்சள், பச்சை வண்ண பட்டாடை உடுத்தி ராஜா மகுடம் அணிந்தவாறு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

42ஆவது நாளானநேற்றுநள்ளிரவு இரண்டு மணியளவில், பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 4 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று விடுமுறை நாள் என்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. அத்திவரதர் வைபவம் தொடங்கி 42 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 85 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் நான்கு நாட்களே அத்திவரதர் வைபவத்தை காண முடியும் என்பதால், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். தொடர் விடுமுறை என்பதாலும் இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் இன்று கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details