தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

anganwadi workers protest
அங்கன்வாடி ஊழியர்கள்

By

Published : Jan 29, 2021, 2:16 PM IST

காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. அம்மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

3 அம்ச கோரிக்கைகள்

  1. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.
  2. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்

அங்கன்வாடி ஊழியர்கள்
விரைந்து தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை தரமணி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கடையநல்லூரில் புதிய தாலுக்கா அலுவலக கட்டடத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details