ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி சென்னையிலிருந்து ராணிப்பேட்டை சென்றார்.
வழிநெடுகே முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
காஞ்சிபுரம்: அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிடவும், சில திட்டங்களை தொடக்கி வைக்கவும் ராணிப்பேட்டை சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுகே மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது.
cm
முதலமைச்சர் செல்லும் வழியில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பொன்னேரி கரையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் சரவணன், அரசு அலுவலர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.