தமிழ்நாடு

tamil nadu

அத்திவரதர் வைபவத்தின் 35ஆம் நாள்; வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் 35ஆம் நாளான இன்று, வெந்தய நிறப் பட்டாடையும், செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்திவரதரை வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

By

Published : Aug 5, 2019, 3:55 AM IST

Published : Aug 5, 2019, 3:55 AM IST

DEVOTEE

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 35ஆவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் 5:30 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டாடையில் மல்லிப்பூ, ரோஜா பூ மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிகாலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்திவரதர்
மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

மேலும், 34ஆம் நாளான சனிக்கிழமையன்று ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details