மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் . இந்த சட்டம் தமிழகத்தில் 2018 அமலுக்கு வந்தது . அதன்படி கல்வியல் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க தேர்வின் முதல் தாளிலும் மற்றும் எட்டாம் வகுப்பு பாடம் நடத்த இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறியுள்ளனா்.
ஆசிரியர் தகுதி தேர்வு: காஞ்சிபுரத்தில் 6725 பேர் எழுதினர்!
காஞ்சிபுரம்: மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 6725பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர். நாளை 22 மையங்களில் 9493 இரண்டாம் நாள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் 4 முறை தேர்வு நடைபெற்றது இந்த நிலையில் முதல் தாள் தேர்வு இன்றும் இரண்டாம் நாள் தேர்வு நாளையும் நடைபெற உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத துவங்கி உள்ளனர் .தேர்வு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தோ்வில் காப்பி அடிப்பது போன்ற முறைகேடுகளை தவிர்க்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 725 தேர்வர்களும் இரண்டாம் நாளில் 22 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 493 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார்.