காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டவரும் அரசு நிலங்களை வருவாய்த்துறை மீட்டுவருகிறது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவரும் குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டு குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் நிறுவனத்தின் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.
குயின்ஸ் லேண்ட் வசம் இருந்த 32.41 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு! அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி, இன்று (ஜூன் 25) குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில், அந்நிறுவனத்தால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர்.
குயின்ஸ் லேண்ட் வசம் இருந்த 32.41 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு! அதோடு நிலத்தில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன. இந்த மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில், குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தின் ரோப் கார், புட் கோர்ட், போட் ஹவுஸ், நீச்சல் குளம் உள்ளிட்டவை அடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் சைலேந்தர் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ரத்தத்தில் கையெழுத்துப் போட்டவன் நான்.. ஈபிஎஸ் தான் தலைமையேற்க வேண்டும் - தமிழ் மகன் உசேன்