தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி!

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

By

Published : Jun 3, 2022, 3:15 PM IST

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி
இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரில் உள்ள ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது.

தான் உயிருடன் இருக்கும்போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தை மீது அதிகப்பாசம் கொண்ட மகேஷ்வரி, தனது திருமணத்துக்கு தந்தை இல்லாத சோகத்தில் இருந்துள்ளார். தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், பத்மாவதி குடும்பத்தினர் ரூ.5 லட்சம் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையைத் தயாரித்தனர். செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலையில் தத்ரூபமாக இருந்தார்.

இந்த சிலையைப் புரோகிதர்கள் முன்னிலையில் வைத்து திருமணச்சடங்குகளை நடத்தினர். அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜின் மெழுகுசிலையைப் பார்த்து கண் கலங்கினார். இதைக் கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திர கடை உரிமையாளர் வெட்டிக்கொலை - சாலைமறியல்

ABOUT THE AUTHOR

...view details