தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சாதி மறுப்பு திருமணம்: பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி: அதிமுக எம்எல்ஏ பிரபு, தனது மகள் சௌந்தர்யாவை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறி சௌந்தர்யாவின் தந்தை எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

mla
mla

By

Published : Oct 5, 2020, 2:56 PM IST

கள்ளக்குறிச்சி தனித்தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு (34). தியாகதுருகத்தைச் சேர்ந்த மலையம்மன் கோயில் பூசாரி சாமிநாதன்-மாலா தம்பதியின் மகள் சௌந்தர்யா (20). எம்எல்ஏ பிரபுவும் - செளந்தர்யாவும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் தந்தை மறுப்புத் தெரிவித்த நிலையில், எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திச் சென்றதாக நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், இன்று (அக். 05) அதிகாலை 5.40 மணியளவில் பிரபு தனது பெற்றோர் முன்னிலையில் செளந்தர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதையறிந்த சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன், எம்எல்ஏ பிரபுவின் வீட்டின் முன்பு தனக்கு துரோகம் செய்ததாகக் கூறி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தியாகதுருகம் காவல் துறையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இதனால், கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க:"நாளைய முதல்வரே" 100அடியில் ஃப்ளெக்ஸ்... ஆதரவு அலையில் ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details