தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 15, 2020, 7:47 PM IST

ETV Bharat / state

அரசியல் அழுத்தம் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டேன்: வேல்முருகன்

கள்ளக்குறிச்சி: அரசியல் அழுத்தம் காரணமாக நான் கைது செய்யப்பட்டேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன்
வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 2018ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் திடீரென்று சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 14 பேர் இன்று உளுந்தூர்பேட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறுகையில், அரசியல் அழுத்தம் காரணமாகவே கைது செய்து என்னை சிறைப்பிடித்தனர். இந்த வழக்கு புனையப்பட்ட ஒரு வழக்கு. என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதை சட்டத்தின் துணைகொண்டு உடைத்து நாங்கள் வெளியே வருவோம்” என்றார்.

இதையும் படிங்க: தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு - கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details