தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2020, 2:23 PM IST

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் தேர் திருவிழாவிற்குத் தடைவிதித்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி: சின்ன திருப்பதி கெஜகிரி வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று (அக். 17) நடக்கவிருந்த தேர்த் திருவிழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.

தேர் திருவிழா
தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, சின்ன திருப்பதி கெஜகிரி வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருக்கும் பக்தர்கள், மாத இறுதியில் நடக்கும் சின்ன திருப்பதி கெஜகிரி வெங்கடேசன் பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவைக் காண வருவர்.

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (அக்.17) சின்ன திருப்பதியில் தேர்த்திருவிழா நடைபெற இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்விதமாக இவ்விழா நடத்த மாவட்ட ஆட்சியர் கிரண்குர்ராலா தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மருத்துவ கல்லூரி, மாவட்ட வருவாய்த் துறைக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி : தொடங்கி வைத்த சட்டத்துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details