தமிழ்நாடு

tamil nadu

விதியை மீறி செயல்பட்ட நகைக்கடைக்குச் சீல் வைத்த நகராட்சி அலுவலர்கள்

By

Published : Jun 30, 2020, 11:07 PM IST

கள்ளக்குறிச்சி: விதியை மீறி செயல்பட்டுவந்த நகைக்கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Municipal officials sealed off private jeweler
Municipal officials sealed off private jeweler

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தs சூழலில் தொற்று அதிகமாக உள்ள 4 வார்டுகளிலுள்ள 27 தெருக்களில் கடைகள், சேலம் மெயின் ரோடு சாலையிலுள்ள கடைகள் ஆகியவற்றைத் திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஆட்சியரின் உத்தரவை மீறி சேலம் மெயின் சாலையில் நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, நகைக் கடையை மூடி சீல் வைக்கும்படி நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பாரதி (பொறுப்பு) தலைமையிலான நகராட்சி அலுவலர்கள், உத்தரவை மீறி செயல்பட்டுவந்த நகைக்கடையை மூடி சீல் வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details