கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சவுத்திரவள்ளிபாளையம் கிராமத்தில் நேற்று (ஜன. 6) இரவு பெய்த கனமழையால் அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழை: நீரில் சிக்கி 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: தொடர் கனமழை காரணமாக கோழி பண்ணைக்குள் மழைநீர் புகுந்து விவசாயி ஒருவர் வளர்த்து வந்த 3, 500 கோழி குஞ்சுகள் நீரில் சிக்கி இறந்தன.
kallakurichi-farmers-chicks-death-in-rain
வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்திருந்த பிரபாகரன் என்பவரது கோழிப் பண்ணைக்குள் மழை நீர் புகுந்தது. பிறந்து 15 தினங்களே ஆன 3, 500 கோழிக் குஞ்சுகள் நீரில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்தன. இதனால் பிரபாகரனுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க... 'எனக்கு கோழிக்குஞ்சு வேணும்' - குடி போதையில் அரிவாளுடன் இளைஞர் அலப்பறை