தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2020, 2:31 PM IST

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் ஏரி ஆக்கிரமிப்பு: விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஏரி பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த தனிநபருக்கு எதிராக விவசாயிகள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

உளுந்தூர்பேட்டையில் ஏரி ஆக்கிரமைப்பு
உளுந்தூர்பேட்டையில் ஏரி ஆக்கிரமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டத்தூர் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த எரியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தள்ளார்.

இதனால் மழை நீர் ஏரியிலிருந்து வெளியேறி விவசாய நிலங்களில் நிரம்பியுள்ளது. இதனால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்று (அக்.9) விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த தனிநபர், நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் ஆகியோரை கண்டித்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வந்த உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருநாவலூர் தனிப்பிரிவு காவலர் மனோகர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் விவசாயிகளிடம், ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் தற்காலிகமாக விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details