கள்ளக்குறிச்சி:திருக்கோவிலூர் அருகே காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வாசலில் விளையாடிய குழந்தை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த செப் 17 ஆம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மாலை காணமல் போய்விட்டதாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார்.
ஸ்பீக்கர் பாக்ஸில் துர்நாற்றம்:இந்த புகாரின் அடிப்படையில் திருப்பாலபந்தல் போலீசார் குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று (செப். 21) காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் ஒன்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்துள்ளனர்.