தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

By

Published : Mar 16, 2020, 9:58 PM IST

கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள்
விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாகன ஓட்டுநர்களிடையே, வாகனங்களில் பயணிக்கும் போது குழந்தைகள், மாணவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் காணொலி மூலம், கரோனா தொற்று நோய் குறித்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பங்கஜம், விழிப்புணர்வு கருத்துகளைக் கூறினார். மேலும், சுகாதாரமான முறையில் கை கழுவுதல், பள்ளி வாகனங்களில் நோய் தொற்று கிருமிகள் பரவாமல் தடுக்க மருந்து தெளித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.

வாகன ஓட்டுநர்களுக்கான கரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் 700க்கும் மேற்பட்ட ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கொரோனா பரவாமல் தடுக்க மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details