கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள புக்கிரவாரி புதூர் கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று உள்ளது. இக்கடை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நகைக்கடை திறக்காமல் இருந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் தனது கடையை திறப்பதற்காக லோகநாதன் சென்றுள்ளார்.
அப்போது நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு லோகநாதன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 281 சவரன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகிய அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து லோகநாதன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நகைக்கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் காலியான நகைப் பெட்டிகள் சிதறி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கொள்ளைக் கும்பல் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தலைமையிலான காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிக்கன் கடை ஷட்டரை உடைத்து கல்லாப்பெட்டியை தூக்கிச்சென்ற கவ்பார் கொள்ளையர்கள்!