தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 17, 2020, 5:33 PM IST

ETV Bharat / state

தொடர் கனமழை: மணிமுத்தாறு அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப் பகுதியில் நேற்றிரவு (டிச.16) முழுவதும் பெய்த கன மழையால் மணிமுத்தாறு அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

manimuttaru dam
manimuttaru dam

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று (டிச.16) முழுவதும் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதி புதிய அணைக்கட்டின் வழியாக வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மணிமுத்தாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கிரண்குராலா அணையை நேரில் ஆய்வு செய்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.

மணிமுத்தாறில் 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அனையிலிருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் மணிமுத்தாறு அணையை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க:அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details