தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி போடும் பணி ஐந்தாவது நாளாக நிறுத்தம்: மக்கள் ஏமாற்றம்!

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் மருந்து தட்டுப்பாடு காரணமாக ஐந்தாவது நாளாக கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஈரோட்டில் தடுப்பூசி போடும் பணி ஐந்தாவது நாளாக நிறுத்தம்
ஈரோட்டில் தடுப்பூசி போடும் பணி ஐந்தாவது நாளாக நிறுத்தம்

By

Published : Jun 10, 2021, 3:41 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

இதுவரை 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி மருந்துகள் தீர்ந்த நிலையில், ஐந்து நாள்களாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் போடப்பட்டு வந்த நிலையில், நாள்தோறும் 400க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றும், டோக்கன்கள் வாங்கி வைத்தும் ஊசி போட்டு வந்தனர்.

ஈரோட்டில் தடுப்பூசி போடும் பணி ஐந்தாவது நாளாக நிறுத்தம்
ஈரோட்டில் தடுப்பூசி போடும் பணி ஐந்தாவது நாளாக நிறுத்தம்

தடுப்பூசிகள் தீர்த்தத்தால் மக்கள் அச்சம்

பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுவந்த நிலையில், ஐந்து நாள்களாக தடுப்பூசிகள் போடாததால் பொதுமக்கள் மருத்துவமனை, தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று தடுப்பூசிகள் இல்லை என்ற அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தடுப்பூசிகள் தீர்த்தத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தடுப்பூசிகள் விரைவில் வர இருப்பதால் நாளை (ஜூன் 11) அல்லது நாளை மறுநாள் (ஜூன் 12) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details