ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நாராயண வலசு பகுதியில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த செளந்தரராஜன், சதீஷ் ஆகிய இரண்டு இளைஞர்களும் பால்ராஜ் பணியாற்றும் உணவகத்தில் ஒரே மாதிரியான நான்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உணவு வாங்கியுள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த பால்ராஜ் ரூபாய் நோட்டுகளைச் சோதனை செய்ததில் கள்ள ரூபாய் நோட்டுகள் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து உடனடியாக ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காரின் அடிப்படையில் உணவகத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர், சௌந்தரராஜன், சதீஷ் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செலவு செய்ய பணம் இல்லாததால் யூ-ட்யூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் அச்சடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து 20 ஆயிரத்து 100 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரு கார்,இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.