ஈரோடு: கஸ்பாபேட்டையை சேர்ந்த வேன் ஓட்டுனர் பசுபதி, ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி இருந்த 13 வயது இரண்டு சிறுமிகளை மிரட்டி அவர் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் பசுபதி்யை கடந்த 2019இல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி, பசுபதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பு அளித்தார்.
மேற்படி வழக்கில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளில் முதல் சிறுமிக்கு ரூ.5 லட்சமும் இரண்டாவது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்சமும் ஆக மொத்தம் ரூ 6 லட்சமும் தமிழ்நாடு அரசு பாலியல் அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாஜக பிரமுகரின் கார் எரிப்பு வழக்கு - ஈரோட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது