கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு லாரிகளில் கரும்புகள் கொண்டுவரப்படுகின்றன. இந்த லாரிகள் காராப்பள்ளம் சோதனைச் சாவடி வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைகின்றன. அதிக பாரம், அதிக உயரம் ஏற்றும் லாரிகளைக் கட்டுப்படுத்த, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் 14 அடி உயர தடுப்பு கம்பி அமைத்துள்ளனர். அனைத்து வாகனங்களும் இந்தத் தடுப்புக்கம்பி வழியாகச் செல்லும்போது, 14 அடிக்கு மேல் உள்ள சரக்கு பாரம் உரசும் என்பதால், லாரிகள் 14 அடி வரை மட்டுமே சரக்குகளை ஏற்றிவருகின்றன.
லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உள்ள கரும்புகளை ஓட்டுநர்கள் காராப்பள்ளம் வனச் சாலையில் வீசியெறிவதால், கரும்பு வாசத்தை நுகர்ந்த யானைகள் அங்கு படையெடுத்துவருகின்றன.