ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாக்கம்பாளையம் தடுப்பணை வழியாக பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளம் கோம்பையூர்தொட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் மாக்கம்பாளையம் மற்றும் கோம்பையூர்தொட்டி இடையே 3 நாள்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கோம்பையூர் தொட்டி மக்கள் தங்களது விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் கிாரமத்திலேயே முடங்கியுள்ளனர்.
மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்... போக்குவரத்து துண்டிப்பு! வெள்ளம் காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் வரும் அரசுப்பேருந்து ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச்செல்வதில் தடை ஏற்பட்டது. பள்ளி மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி கட்டித்தர வேண்டும்; கர்நாடகாவிற்கு வீணாகச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்தி நீர்த்தேக்கம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கடலூரில் 5 மணி நேரமாக கனமழை