தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுத்தை, புலிகளுக்கு தேவையான இரை விகிதம் சமனாக உள்ளது - வனத்துறை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. சிறுத்தை, புலிகளுக்கு தேவையான இரை சரியான விகிதத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சிறுத்தை, புலிகளுக்கு தேவையான இரை சரியான விகிதத்தில்  உள்ளது- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆய்வு
சிறுத்தை, புலிகளுக்கு தேவையான இரை சரியான விகிதத்தில் உள்ளது- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆய்வு

By

Published : Jul 5, 2022, 10:47 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முன் பருவ மழைக் கால கணக்கெடுப்பு பணி ஜூலை 2ஆம் தேதி நிறைவுற்றது. தொடர்ந்து 6 நாள்கள் நடந்த கணக்கெடுப்பில், இந்த காப்பகத்தில் உள்ள புலி, சிறுத்தை, கழுதைப் புலிகளுக்குத் தேவையான இரை விலங்குகள் விகிதம் சரியாக உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 10 வனச்சரகங்களை கொண்டுள்ளது. இந்த வனச்சரகங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கும். இந்தாண்டு ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. இதில் 280 வன ஊழியர்கள் பங்கேற்றனர். நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு, பகுதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. அண்மையில் பெய்த மழை காரணமாக தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் புள்ளி மான்கள் அதிகளவில் தென்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை சார்பில், இந்த கணக்கெடுப்பில் சிறுத்தை, புலி, கழுதைப்புலிகளுக்கு தேவையான இரை விலங்குகள் அதிகரித்துள்ளதாகவும், விகிதம் சரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புள்ளிவிவரங்களை உயர் அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் கிருபா சங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:TTF வாசன் மீது குவிந்த புகார்களும்... காவல் துறையின் பதிலும்... நடவடிக்கை பாயுமா?

ABOUT THE AUTHOR

...view details