தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம் - மகன் கண்முன்னே மனைவிக்கு தீவைத்த கணவர்

சென்னை: நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் கண்முன்னே மனைவிக்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர் காவல்நிலையம்

By

Published : Jun 23, 2019, 9:28 AM IST

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து - சசிகலா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் மவுலிஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரிமுத்து வெளியூர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதில் இருந்து சசிகலா மீது சந்தேகமடைந்த மாரிமுத்து தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவும் இதேபோல் தம்பதிக்குள் பிரச்னை எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து மகன் கண்முன்னே சசிகலாவுக்கு தீவைத்துள்ளார். உடல்முழுவதும் தீப்பற்றிய நிலையில் எரிச்சலால் கூச்சலிட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாரிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மகன் கண்முன்னே மனைவிக்கு கணவன் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details