ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதே நிலைப்பாடாக உள்ளது. இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . மேலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
தனி கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்துள்ளது. உயர் நீதிமன்றம் 40 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் சில பள்ளிகள் 100 சதவீத கல்வி கட்டணத்தை வசூல் செய்துள்ளனர்.
அவ்வாறு வசூல் செய்தால் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்றோர் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். பள்ளியை திறக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வருகின்ற 27ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனி தேர்வாளர்கள் அனைவரும் தேர்ச்சி செய்ய அவர்கள் சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்” என்றார்.
இதையும் படிங்க...கரோனா தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் நாளை நாகை பயணம்!