தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துள்ளி குதித்தோடும் மலை அணில்கள் - தலமலை வனப்பகுதியில் அதிகரிப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனப்பகுதியில், மலை அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

squirrel
squirrel

By

Published : Feb 24, 2020, 11:02 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் தலமலை வனச்சரகம் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளதால் இங்கு அரிய வகை வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக, மலை அணில்கள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியாக விளங்கும் தலமலை வனப்பகுதியில் திம்பம் - தலமலை வனச்சாலையில் சாலையோர மரத்தின் கிளைகளில், மலை அணில்கள் முகாமிட்டுள்ளன. இந்த அணில்கள் மரத்தின் கிளையில் தாவிக்குதித்து ஓடுவதோடு, வனப்பகுதியில் விளையும் காய்கள், பழங்களை உணவாக உட்கொள்கின்றன.

தலமலை வனப்பகுதியில் காணப்படும் மலை அணில்கள்

பழுப்பு நிறத்தில் நீண்ட வாலுடைய மலை அணில்கள் மரத்தில் நடமாடும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. தலமலை சாலையில் வனத்துறை சார்பில் அணில் நடமாட்டமுள்ள பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அணில்கள் சாலையில் நடமாடும் என்பதால் வனச்சாலையில் செல்வோர் வாகனத்தை மெதுவாக இயக்குமாறு வனத்துறையினர் வனகிராம மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். .

அரிய வகை உயிரினமாகக் கருதப்படும் மலை அணிலை பாதுகாக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மெதுவாக செல்லுங்கள் அதுவும் உயிர் தானே..! - பறக்கும் அணில் விபத்தில் பலி

ABOUT THE AUTHOR

...view details