ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோட்டில் இரண்டாம் நாளாக பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி, "கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கரோனா காலத்தில் மக்களைச் சந்திக்க வராத நீங்கள், தற்போது கிராம சபை நடத்துவது எப்படி என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது மட்டுமின்றி, அப்பெண் வேலுமணி ஆதரவாளர் என்றும் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே. அப்போது மாற்றுக் கட்சியினர் தங்களது பிரச்சினையைக் கூறினால் திமுகவினர் ஒன்றிணைந்து கேள்வி கேட்பவரை அடித்து தாக்குவது நியாயமா? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்கக் கூடாதா? கேள்விகள் கேட்கக் கூடாது எனில் ஏன் அவர்கள் கூட்டம் நடத்த வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. நாங்கள் காலம்காலமாக பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது நான் விவசாயிதான். அவருக்குச் சொல்வதற்கென்று தொழில் இல்லாததற்கு நான் என்ன செய்ய முடியும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க:'விவசாயிகளை கொச்சைப்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்தவேண்டும்' - முதலமைச்சர்