தமிழ்நாடு

tamil nadu

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்!

ஈரோடு: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு இலட்சம் மதிப்பிலான போதை மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

By

Published : Mar 7, 2021, 3:57 PM IST

Published : Mar 7, 2021, 3:57 PM IST

தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் மலை கருப்புசாமி கோயில் செல்லும் சாலையில் சவுண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே மளிகை ஸ்டோர் நடத்தி வருபவர் செந்தில். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வருவதாக நக்சல் தடுப்பு தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து.
இந்தத் தகவலின் பேரில், நேற்றிரவு (மார்ச்6) தேவராஜ், மகாமுருகன், சென்னிமலை, பிரபு, சுப்பிரமணியம் உள்ளிட்ட நக்சல் தடுப்பு தனிப்பிரிவு காவல்துறையினர் செந்தில் நடத்தி வந்த மளிகைக் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் சுமார் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து உரிமையாளர் செந்திலை அந்தியூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் பேரில் செந்திலை கைது செய்ததோடு, அவர் மீது வழக்கு பதிந்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஃபான் மசாலா மற்றும் புகையிலை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தியூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details