தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிவாயு சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மிதிவண்டி பேரணி

ஈரோடு: எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

By

Published : Jan 22, 2020, 8:02 AM IST

students rally
students rally

நமது நாட்டின் மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை எரிபொருள்களுக்காகச் செலவிடப்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் சேவையும் குறைந்துகொண்டே இருக்கிறது. இயற்கை முறையில் கிடைக்கும் எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே இதனைத் தடுக்க நாம் அனைவரும் மிதிவண்டி ஓட்டும் பழக்கத்திற்கு மாற வேண்டும்.

மிதிவண்டி ஓட்டுவதால் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்து, உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் அது தருகிறது. இந்நிலையில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரஜினி கையில் ஆர்எஸ்எஸ் ஆதாரம்? - சுப.வீரபாண்டியன் சிறப்புப் பேட்டி

ஈரோடு சம்பத்நகரில் தொடங்கிய மிதிவண்டி பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வெட்டுகாட்டு வலசில் நிறைவடைந்தது. பேரணியின்போது எரிவாயுவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கொண்டுசென்றதோடு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details