ஈரோடு: பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்தச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நேற்று (டிசம்பர் 23) 60 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 350 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர்.