தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி

ஈரோடு: வறுமையினால் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு உதவித்தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Oct 31, 2020, 7:28 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வறுமையினால் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலா ரூபாய் 5000 வீதம் 50 பேருக்கு கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் கருப்புசாமி நிதியுதவி வழங்கினார்.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5000 வீதம் 50 பேருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. வறுமையினால் கல்வியை தொடர முடியாத மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

பாரபட்சமின்றி அனைவரும் கல்வியை தொடர்வதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டதாக நிதியுதவிக்கான ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகாராஷ்டிரா நபருக்கு தவறுலதாக ரூ.8.64 லட்சம் வழங்கிய சேலம் ஆதிதிராவிடர் நலத்துறை!

ABOUT THE AUTHOR

...view details