தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகுந்த மண்ணுளிப் பாம்பு

ஈரோடு: சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த மண்ணுளிப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்ணுளி பாம்பு, sand boa
மண்ணுளி பாம்பு, sand boa

By

Published : Jan 22, 2020, 7:55 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் எதிரில் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் சுமார் மூன்று அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட காவல் துறையினர் அந்த மண்ணுளிப் பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் காவல் துறையினர் பிடித்து வைத்திருந்த மண்ணுளி பாம்பை வாங்கிச்சென்று, அதனை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

இதையும் படிங்க: வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை - ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details