தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!

அரசு வேலை வாங்கித்தருவதாகவும், பணி மாறுதல் பெற்றுத்தருவதாகவும் கூறி ரூ.6 லட்சம் பண மோசடி செய்ததாக அர்ச்சகர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!

By

Published : Oct 14, 2022, 4:46 PM IST

ஈரோடு: அடுத்து சம்பத் நகரை சேர்ந்த அரசு செவிலியர் ஒருவருக்கு பணியிட மாறுதல் வாங்கித் தருவதாகவும், பொறியாளர் பட்டயம் பயின்ற மாணிக்கராஜ் என்ற இளைஞருக்கு மருத்துவப்பணியாளர் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஈரோட்டைச்சேர்ந்த அர்ச்சகர் சுந்தர்ராஜன் என்பவர் ரூ.6 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்து ஓராண்டாகியும் வேலை வாங்கித்தராமல் காலம் தாழ்த்திய சுந்தர்ராஜன் பணத்தையும் திரும்ப தராமல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!

அதனையடுத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் ஏற்கெனவே ஈரோட்டில் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸில் பணிபுரிந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது கோயில் அர்சகராகவும், சர்வதேச உரிமைகள் கழகம் என்ற அமைப்பில் மாநில ஆன்மிக அணி செயலாளராகவும் உள்ளார்.

இதையும் படிங்க:சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details