தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடவு வயலான மண்சாலை - எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!

ஈரோடு: சேரும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் கிராம மக்கள்

By

Published : Nov 1, 2019, 11:44 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட பூலமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மண் சாலை மட்டுமே போக்குவரத்திற்காக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேரும் சகதியுமாகி நடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இரவு நேரங்களில் மிகுந்த கவனத்துடன் சென்றாலும், சகதியில் விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை உள்ளதால், மண் சாலையை தார் சாலையாக மாற்றித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் பேரூராட்சி அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் கிராம மக்கள்

மேலும் இப்போராட்டத்திற்கு பிறகும் சாலையை சீரமைக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details