ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டதைப்போல் ஊதியத் தொகையை அதிகரித்து வழங்கிட வேண்டும், அறிவித்தபடி கரோனா சிறப்பு ஊதியத் தொகையினை வழங்கிட வேண்டும், நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள பாக்கித் தொகையை வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இது குறித்து கூறுகையில், "அரசு மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பல்வேறு பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கிரிஸ்டல் என்கிற தனியார் நிறுவனத்தினர் மருத்துவமனையின் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியினை எடுத்துக் கொண்டு நாளொன்றுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 424 ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது.