ஈரோடு: தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் சாதி மற்றும் மதக் கலவரங்கள் ஏற்படவில்லை, இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல மீனவர்களுக்கு பரிசல் ஓட்டும் உரிமம் மற்றும் மீன்பிடிவலை மானியத்தையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
மீனவர்களுக்கு பரிசல் ஓட்டும் உரிமம் வழங்கிய அமைச்சர் "தமிழ்நாட்டில் சாதி கலவரம் இல்லை"
இதன் பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்த அரசின் பணி என்பது, தனி மனிதனுடைய சுதந்திரம் பேணி காக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சாதி, மத கலவரங்கள் ஏற்படவில்லை. அதேபோல் நக்சலைட் தீவிரவாதம் இல்லை.
அண்டை மாநிலங்களில் நக்சலைட் போன்ற தீவிரவாதங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை தவுடுபொடியாக்கியவர் ஜெயலலிதா தான்.
'தமிழ்நாட்டில் நக்சல் தீவிரவாதம் இல்லை' - செங்கோட்டையன் 742 ஆராய்ச்சி மையம்
ஜனவரி மாதம் 20ஆம் தேதிக்குள் கரும்பலகைகள் உள்ள அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு வைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவராக விஞ்ஞான ஆராய்ச்சி கற்றுக்கொள்ள 742 மையங்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை கற்றுக்கொள்ள டேப் வழங்க முதலமைச்சர் ஒப்புதாலோடு மத்திய அரசிடம் கலந்து பேசி மூன்று லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கவுதம் கார்த்திக்கை வழிமறித்து செல்போன் பறிப்பு: சிசிடி மூலம் சிக்கிய திருடர்கள்