ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை, கரளவாடி, மல்லன்குழி, ஜோரகாடு பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், மனிதர்களை தாக்கியும் அட்டகாசம் செய்து வந்தது. இதனைஅடக்குவதற்கு பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்துள்ள அரிசிராஜா மற்றும் கபில்தேவ் கும்கி யானைகள் ஜோரக்காட்டு பகுதியில் முகாமிட்டுள்ளன. கும்கி யானைகளை காண்பதற்கு சுற்றுவட்டாரா கிராமங்களில் இருந்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.