தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக தமிழ்நாடு வந்தடையும். அங்கிருந்து பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்படும்.
தமிழ்நாடு வருகிறது கிருஷ்ணா நதிநீர் - பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு..!
சென்னை: தமிழ்நாட்டிற்கு விரைவில் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வரவுள்ள நிலையில் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியை தமிழ்நாடு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
பூண்டி,செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரியின் மதகுகள், கரைகள் பலமாக உள்ளதா என்பதை பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கண் மதகு, 19 மதகுகளில் உள்ள ஷட்டர்கள் வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்தனர். தொடர்ந்து ஏரியில் உள்வாங்கி கோபுரத்தை ஆய்வு செய்தனர்.