ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக செல்கிறது. ஒரு ஆண்டில் 320 நாட்கள் தண்ணீர் பாயும் காலிங்கராயன் வாய்க்காலை விரிவாக்கம் செய்வது, புதுப்பிப்பது, நவீனப்படுத்துவது போன்ற பணிகளுக்காக 76 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு நீர் வள ஆதார அமைப்பு, கடந்த நவம்பர் 13ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் பணிகளை முடிக்க வேண்டிய காலம் 24 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்புப் பணி: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை முடிக்க 2 ஆண்டுகால அவகாசம் வழங்கியதை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்பு பணி: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தப் பணிகள் நடைபெறும் இரண்டு ஆண்டுகளுக்கு வாய்க்காலில் நீர் திறப்பு இருக்காது என்பதாலும், பணிகளை முடிக்க வேண்டிய காலத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், நீர் திறந்து விடுவதை நிறுத்தக் கூடாது எனவும் வாதிட்டார்.
டெண்டர் அறிவிப்பில் பணிகள் முடிக்கப்படுவதற்கான கால அளவு 24 மாதங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறையைத் தொடர்ந்தால் அது பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, நீர் திறந்துவிடப்படும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் மட்டுமே பணிகள் செய்து முடிக்கும் வகையில் அறிவுறுத்தப்படும் என்றும், இதனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நீர் வள ஆதார அமைப்பு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.