ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு என்றும், பழைய நிலையே நீடிக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டிலேயே கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை 99.47 விழுக்காட்டினரிடமிருந்து குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வாங்கிய வரலாறு ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு உண்டு. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்துள்ளது. இதற்கு மூன்றாண்டு காலம் விதிவிலக்கு கோரப்பட்டுள்ளது. அதுவரை இதேநிலை நீடிக்கும்.
காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் தவறு. வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். அரசு தற்போது கடைப்பிடித்து வரும் பழைய நிலையே நீடிக்கும். சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொருட்படுத்த வேண்டாம். அரசு அறிக்கை வெளிட்டால் மட்டுமே அது உண்மையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக்கொள்கைதான் கடைபிக்கப்படும் என்று அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.