ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் புதிதாக 9 வாகனங்கள் மூலம் 24 மணி நேரமும் நடமாடும் காய்கறிச் சந்தை வாகனம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அனைத்து காய்கறிகளும் அடங்கிய பைகள் 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் காய்கறி வாகனச் சந்தைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்து, அனைத்து காய்கறிகளும் அடங்கிய பைகளை பொதுமக்களுக்கு விநியோகித்தார். இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நவீன இயத்திரத்தை வழங்கினார்.
பெல் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக செயல்படுத்தப்படவுள்ள ராட்சத கிருமி நாசினி புகைபோக்கி இயந்திரத்தை பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை தயார் செய்யும் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்துவிட்டன.