ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அதிமுக சார்பில், நிவாரண பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருள்களை வழங்கினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார்...!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். இதற்கென்று 14 அரசுத்துறை அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என, 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு பணி மேற்கொண்டு வருகிறது.
பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு மையம் சென்று தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களை வீட்டிலிருந்து தேர்வு மையம் அழைத்துச் சென்று பின்னர் வீட்டில் கொண்டு சென்று விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க:கரோனாவால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு!