தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

பண்டிகைகள், முகூர்த்தங்கள் இல்லாத நிலையில், சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பூ விலை வீழ்ச்சி
பூ விலை வீழ்ச்சி

By

Published : Nov 5, 2020, 10:29 AM IST

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் பவானிசாகர், பகுத்தம்பாளையம், எரங்காட்டூர், தாண்டாம்பாளையம், புதுகுய்யனூர் உள்ளிட்ட 50க்கும் அதிமான கிராமங்களில், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ, சம்பங்கிப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பூக்களை விவசாயிகள், சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்தில் விற்பனை செய்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, பண்டிகை, சுபமுகூர்த்தங்கள் காரணமாக, பூக்களின் விலை வெகுவாக உயர்ந்திருந்தது. தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால், பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பூக்களின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிலோ ரூ. 2,346க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ கிலோ ரூ.170 எனவும், 650 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முல்லைப் பூ ரூ.100 எனவும், செண்டுமல்லி ரூ.220-லிருந்து ரூ.55, ரூ.220-க்கு விற்கப்பட்ட சம்பங்கிப் பூ ரூ.30, கோழிக்கொண்டைப் பூ ரூ.1200லிருந்து ரூ.55 என விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மல்லிகைப்பூ சாகுபடிக்கு உரமிடுதல், களையெடுத்தல், பூ பறிப்புக் கூலி, உற்பத்திச் செலவு என அதிகச் செலவு பிடிக்கிறது. தற்போது, ஒரு கிலோ பூ ரூ.170க்கு மட்டுமே விற்கப்படுவதால், உற்பத்தி செலவைகூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details