தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

ஈரோடு: வெண்டிபாளையத்தில் உள்ள கல்லறை தோட்டம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் புதைப்பு
கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் புதைப்பு

By

Published : Jul 9, 2020, 7:40 PM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலப்பாளையத்தை சேர்ந்த 33 வயது நபர் கரோனா தொற்று ஏற்பட்டு, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த நபரை வெண்டிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்க மாநகராட்சி ஊழியர்கள் கொண்டுசென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் தங்களுக்கும் கரோனா பரவிடும் என்று கூறி சடலத்தைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் புதைப்பு
இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், வருவாயத் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், காவல் துறையினரின் சமாதான பேச்சைக் கேட்க மறுத்த மக்கள், உடனடியாக அடக்கம் செய்த சடலத்தைத் தோண்டி எடுத்து வேறு எங்கேயாவது புதைக்குமாறு கூறினர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்துசென்றனர்.காவல் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், மீறினால் அவர்களைக் கைது செய்யலாம் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதனையும் மீறி மக்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பது கவலையளிப்பதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதையும் படிங்க: கரோனா தொற்று ஏற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details