தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

ஈரோடு: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

erode rdo put fine for those who having ban plastic bags

By

Published : Sep 26, 2019, 9:33 PM IST

ஈரோடு ஆர்.கே.வி சாலை, மணிகூண்டு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் வணிக நிறுவனங்களில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பிரபல துணிக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்த ஐந்து கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

துணிக்கடைகளில் ஆய்வு செய்த கோட்டாச்சியர்

இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் தெரிவிக்கையில், மாநகராட்சி முழுவதும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காதலியின் தந்தையைக் கொன்ற காதலன் - விஏஓவிடம் நேரில் சரண்!

ABOUT THE AUTHOR

...view details