ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்றுமாலை திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் இரண்டு மணிநேரம் பெய்த மழையால் சாலைகள் முழுவதும் மழைநீர் வெள்ளநீர் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளான நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மழைநீருடன், சாக்கடை கழிவுகளும் கலந்ததால் துர்நாற்றம் வீசியது.
சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர் இந்த கழிவுநீர் மாநகராட்சியின் உயிர் நாடியாக விளங்கும் நேதாஜி சாலையிலும், அதனை ஒட்டியுள்ள நேதாஜி தினசரி காய்கறி சந்தையிலும் புகுந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மூக்கைப்பொத்திக் கொண்டு சந்தையை கடக்க வேண்டிய நிலை உருவானது.
இதனால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நோய் பரவும் வகையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதையும் படியுங்க: மழை வேண்டி மரத்திற்கு திருமணம் செய்த கிராம மக்கள்!