ஈரோடு மாநகரில் பாதாளச் சாக்கடை திட்டம், பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பு, ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து நடைபெற்றுவருகின்றன. இதற்காக மாநகரின் முக்கியச் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றுவருவதால், நகரின் முக்கியச் சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
erode motorists suffer damage road, ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி மேட்டூர் சாலையில் நடைபெற்றுவந்த பணிகள் முடிவுற்றாலும் தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை, புழுதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள கடைகளிலும் புழுதிபடிந்து வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தங்களின் சிரமத்தை போக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை பாதாளச் சாக்கடை பிரச்னை...மக்கள் வேதனை !