தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி கள் இறக்கிய திமுக கவுன்சிலர் கைது! - Erode liquor seller arrested

ஈரோடு: ஊரடங்கு தடையை மீறி கள் இறக்கிய திமுக கவுன்சிலர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கள் இறக்கிய திமுக கவுன்சிலர் கைது
கள் இறக்கிய திமுக கவுன்சிலர் கைது

By

Published : Apr 23, 2020, 3:02 PM IST

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள் இறக்குவதாக அரச்சலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், கள் இறக்கிய கொடுமுடி ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் பழனிசாமி, மரம் ஏறிய முருகேஷ் என்பவரையும் கைது செய்தனர்.

கள் இறக்கிய திமுக கவுன்சிலர் கைது

ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: கரேனா முகமுடியுடன் துரத்தி வருபவர்களை கண்டு அலறியடித்து ஓடும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details